பின்னலாடைகளுக்கு காஜா-பட்டன் வைக்க கூலியை உயர்த்தி வழங்க கோரிக்கை

திருப்பூர், டிச.10:திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் வரும் ஜனவரி 1 ம் தேதி முதல் துணிகளுக்கு காஜா-பட்டன் வைக்க புதிய கூலி உயர்வை வழங்க வேண்டுமென திருப்பூர் மாவட்டம் காஜா-பட்டன் உரிமையாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.திருப்பூர் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஆயிரத்து 600 க்கு மேற்பட்ட பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களும், இதனைச்சார்ந்து 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஜாப்-ஓர்க் நிறுவனங்கள் இயங்கி வருகிறது. பெரும்பாலான குடும்ப உறுப்பினர்கள் பனியன், ஜட்டி, பிரா, டி-சர்ட், நைட்டி உட்பட பல்வேறு ஆடைகளை குடிசைத்தொழில் தங்களுடைய வீடுகளிலேயே ஆடைகளை தைத்து உள்ளூர் வியாபாரிகளுக்கு விற்பனை செய்கின்றனர். சர்ட், டி-சர்ட் ஆகியவற்றி–்ககு காஜா-பட்டன் வைக்க வெளியிடங்களில் கொடுத்து மீண்டும் வாங்கி பேக் செய்து விற்பனை செய்கின்றனர். திருப்பூர் மாநகரில் சர்ட், டி-சர்ட் ஆகியவற்றிக்கு காஜா-பட்டன் வைக்கும் தொழிலில் 500 க்கு மேற்பட்டோர் பல ஆண்டுகளாக ஜாப்-ஒர்க்காக செய்கின்றனர். பின்னலாடை உற்பத்தியாளர்கள்  கடந்த 10 ஆண்டுகளாக ஒரே கூலியை வாங்கி வருகின்றனர். இந்த 10 ஆண்டுகளுக்குள் டிசல் கட்டணம் பல மடங்கு அதிகரிப்பு, இயந்தரங்களின் தேய்மானச்செலவு, புழுது நீக்கும் செலவு, தொழிலாளர்கள் சம்பளம், மின் கட்டணம் உயர்வு, கட்டடங்களுக்கு வாடகை அதிகரிப்பு என உற்பத்தி செலவு பல மடங்கு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், பணம் மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. ஆகிய காரணங்கள் தொழில் நிறுவனங்கள் கடுமையான பொருளாதார ரீதியாக ஸ்தம்பித்து வருகிறது. இதனால், இரண்டு ஆண்டுகளுக்கு முன் கூலி உயர்வு செய்திருக்க வேண்டும். மேற்கூறிய காரணங்களால் கூலி உயர்வை தவிர்த்து வந்தனர். மேலும், நிட்டிங், துணிகளுக்கு சாயமிட, பிரிண்டிங் ஆகியவற்றின் கட்டணங்கள் அதிகரித்துள்ளனர். தொடர்ந்து உற்பத்தி செலவு அதிகரிக்கவே கூலி உயர்வு என்பது காலத்தின் கட்டாயமாக உள்ளது. பின்னலாடை உற்பத்தியாளர்கள் புதிய கூலியை வரும் ஜனவரி 1 ம் தேதி முதல் வழங்க வேண்டுமென காஜா-பட்டன் உரிமையாளர் சங்கம் வேண்டுகோள்விடுத்துள்ளது. இது குறித்து திருப்பூர் காஜா-பட்டன் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ருத்தரமூர்த்தி, செயலாளர் சுப்பிரமணியன், பொருளாளர் திருமுருகேசன் ஆகியோர் கூறியதாவது.

திருப்பூர் பின்னலாடை  உற்பத்தியாளர்களுக்கு   காஜா-பட்டன் வைத்துக்கொடுக்கும் நிறுவனங்கள் கடந்த 10 ஆண்டுகளாக கூலி உயர்வு வழங்கவில்லை. செலவினங்கள் அதிகரித்து வருவதால் வரும் ஜனவரி 1 ம் தேதி முதல் புதிய கூலி உயர்வுப்படி பணம் வசூலிக்க சங்கத்தின் மூலம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். நார்மல் இயந்தரங்கள் மூலம் காஜா-பட்டன் வைக்க 75 பைசா, காஜா மட்டும் 50பைசா, பட்டன் வைக்க 50 பைசாவும், எலக்ட்ரானிக்  இயந்தரங்கள் மூலம் காஜா-பட்டன் வைக்க ரூ.ஒன்றும், காஜா மட்டும் 60 பைசா, பட்டன் மட்டும் 60 பைசா, பார்டாக் 60 பைசா, பிரஸ் பட்டன் செட் 70 பைசா, ஐலெட் பட்டன்(சிங்கிள்) 80 பைசா, மோல்டு பட்டன் 80 பைசா என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் புதிய கூலி உயர்வை வழங்கி தொடர்ந்து ஆதரவு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Related Stories: