ரூ.1.25 கோடி மோசடி லாரி உரிமையாளர் கைது

கோவை, டிச.10:  கோவை சோமனூர் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. நூல் வியாபாரி. இவர் சோமனூர் பேப்ரிக்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் மில்களில் நூல் வாங்கி அதை விசைத்தறி கூடங்களுக்கு விற்பனை செய்து வந்தார். இவரது நிறுவனத்தில் கருமத்தம்பட்டியை சேர்ந்த கார்த்திக் (36) என்பவர் 7 ஆண்டாக கணக்காளராக பணியாற்றி வந்தார்.

இவர் நிறுவனத்தின் மூலமாக விசைத்தறி கூடத்திற்கு நூல் அனுப்பி காடா துணியாக தயாரித்து வந்த கணக்குகளை முறையாக காட்டவில்லை என்றும், 1.25 கோடி ரூபாய் மதிப்பிலான 4.35 லட்சம் மீட்டர் காடா துணிகளை பல்லடத்தை சேர்ந்த லாரி உரிமையாளர் உலகசாமி துரை (47) என்பவருடன் சேர்ந்து முறைகேடாக அபகரித்து விற்பனை செய்து விட்டார் என்றும் கந்தசாமி புகார் கூறினார். கந்தசாமி அளித்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் உலகசாமி துரை நேற்று கைது செய்யப்பட்டார். தப்பிய கார்த்திக்கை போலீசார் தேடி வருகின்றனர். பல மாதங்களாக காடா துணிகளை மோசடியாக அபகரித்து பல்வேறு இடங்களில் இவர்கள் விற்பனை செய்திருப்பதாக தெரிகிறது.

Related Stories: