×

கோவை அரசு மருத்துவமனையில் டெங்குவிற்கு 31 பேர் அட்மிட்

கோவை, டிச. 10:  கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பின் காரணமாக 31 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பருவ மழையின் காரணமாக டெங்கு காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், தொடர்ந்து டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலின் பாதிப்பு இருந்து வருகிறது.

கோவை அரசு மருத்துவமனையில் நேற்றைய நிலவரப்படி டெங்கு காய்ச்சல் பாதிப்பின் காரணமாக திருப்பூரை சேர்ந்த 19 பேர், கோவையை சேர்ந்த 12 பேர் என மொத்தம் 31 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 28 பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், வைரஸ் காய்ச்சல் பாதிப்பினால் 140 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து மருத்துவமனையின் டீன் அசோகன் கூறுகையில், ‘‘ெடங்கு காய்ச்சல் பாதிப்பு குறைய துவங்கியுள்ளது. 40 முதல் 45 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது 31 பேர் என்ற அளவில் இருக்கிறது. டெங்கு காய்ச்சல் உள்ள நோயாளிகள் குறித்த விவரங்கள் சுகாதாரத்துறைக்கு உடனடியாக அனுப்பப்படுகிறது. அவர்கள், சம்பந்தப்பட்ட இடத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை மேற்கொள்கின்றனர்,’’ என்றார்.

Tags : dengue hospital ,
× RELATED மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரம்