‘மிஸ் வின்டர் குயின் 2019’ போட்டி

கோவை, டிச. 10: நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து செயல்பட்டு வரும் நீல்கிரீஸ் எபிக் ஈவன்ட்ஸ் அமைப்பு சார்பில் தென்னிந்திய அளவில் சிறந்த திறன் வாய்ந்த மக்களை அடையாளம் கண்டு கவுரவிக்கும் வகையில், ‘மிஸ் வின்டர் குயின் 2019’ என்ற போட்டி நடந்தது. திருமணம் ஆனவர்கள், திருமணம் ஆகாத பெண்கள் என இரு பிரிவாக இப்போட்டி நடத்தப்பட்டது. இதில், பல்வேறு பகுதிகளை சேர்ந்த திறமை வாய்ந்த 10 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. போட்டி நடுவர்களாக பூஜா சிங் யோகன் மற்றும் சங்கீதா சின்டே ஆகியோர் செயல்பட்டனர். சர்வதேச இந்திய அழகி போட்டியில் பரிசு வென்ற சோனாலி பிரதீப் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இதையொட்டி, கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி இயக்குனர் மற்றும் செயலாளர் டாக்டர் சி.ஏ.வாசுகிக்கு சிறந்த கல்வியாளர் விருது வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, தி நீல்கிரிஸ் எபிக் ஈவன்ட்ஸ் இயக்குனர் விக்னேஷ் உள்பட பலர் செய்தனர்.

Related Stories: