சூலூருக்கு 1.5 லட்சம் வேட்டி சேலைகள் வந்தன

சூலூர், டிச.10 ;  சூலூரில்  அரிசி வாங்கும் குடும்ப அட்டைதார்ர்களுக்கு வழங்குவதற்காக  1.5 லட்சம் இலவச வேட்டி சேலைகள் வந்தன.

ஆண்டுதோறும்  பொங்கல் பண்டிகைக்கு அரிசி பெறும் குடும்ப அட்டைதார்ர்களுக்கு தமிழக அரசின் சார்பில்  இலவச வேட்டி சேலைகள்  வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு சர்க்கரை அட்டைதார்ர்களையும் அரிசி பெறும்  அட்டையாக மாற்றிக் கொள்ளலாம் என அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து பெரும்பாலான சர்க்கரை அட்டைதாரர்கள் தங்கள் குடும்ப அட்டைகளை அரிசி பெறும் அட்டைகளாகக மாற்றிக் கொண்டனர். இதனால் இலவச வேட்டி சேலை பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை  இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், சூலூர் தாலுகாவில் உள்ள அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்காக 1.5 லட்சம் வேட்டி சேலைகள் சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு லாரிகள் மூலம் வந்தது. இவை வட்டாட்சியர் அலுவலகத்தில் இறக்கி வைக்கப்பட்டுள்ளது . இலவச வேட்டி சேலைகள் எப்போது வழங்கப்படும் என சூலூர் வட்டாட்சியர் மீனா குமாரியிடம் கேட்ட போது, தற்போதைக்கு வந்துள்ள வேட்டி்,சேலைகளை கொடுப்பது தொடர்பாக உத்தரவு ஏதும் வரவில்லை மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் எப்போது வழங்கப்படும் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

Related Stories: