மாநகராட்சி பகுதிகளில் டெங்குவை ஒழிக்க 800 பணியாளர்கள்

கோவை, டிச. 10:  கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு கொசுக்களை ஒழிக்கவும், டெங்கு காய்ச்சலை தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் மேற்கொள்ளவும் 800 மாநகராட்சி ஊழியர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாநகராட்சியில் கொசு ஒழிப்பு பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் ஆகியோர் வீடு  வீடாகச் சென்று கொசுப்புழுக்கள் பரவாமல் இருக்க அபேட் மருத்துகளையும்,  ஆய்வுகளையும் மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் ஜடாவத் ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கி இருந்தார்.

இதன் அடிப்படையில், மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் வார்டுக்கு 8 பேர் வீதம் 800 மாநகராட்சி பணியாளர்கள் டெங்கு ஒழிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘இந்த பணியாளர்கள் மாநகராட்சிக்குட்பட்ட வார்டுகளில் உள்ள வீடுகளுக்கு சென்று குடிநீர் தொட்டி, தண்ணீர் தொட்டி, தண்ணீர் தேங்கக் கூடிய வாய்ப்புள்ள இடங்களில் ஆய்வு மேற்கொள்வார்கள். அதன் பின் தண்ணீரில் அபேட் மருத்துகளை ஊற்றுவர்கள். அதன் பின் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளுக்கு சென்று 500 மீட்டர் தூரம் வரை மாஸ் கிளீனிங் சுகாதார பணியில் ஈடுபடுவார்கள்,’’ என்றார்.

Related Stories: