சோனியாகாந்தி பிறந்தநாள் விழா

ஈரோடு, டிச.10: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாகாந்தியின் 73வது பிறந்தநாள் விழா ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கொண்டாடப்பட்டது. ஈரோடு பெரியமாரியம்மன் கோயிலில் முன்னாள் கவுன்சிலர் விஜயபாஸ்கர் தலைமையில் சிறப்பு பூஜைகளும், மரப்பாலம் சித்திக் திடலில் மண்டல தலைவர் ஜாபர்சாதிக் தலைமையில் பிரார்த்தனையும், ஈரோடு சிஎஸ்ஐ பிரப் ஆலயத்தில் வக்கீல் பாஸ்கர்ராஜ் தலைமையில் சிறப்பு ஆராதனையும் நடந்தது.

இதைத்தொடர்ந்து, ஈரோடு மூலப்பட்டறையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் சோனியாகாந்தியின் பிறந்தநாளையொட்டி கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாநகர் மாவட்ட தலைவர் ரவி தலைமை தாங்கி கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், மாவட்ட துணைத்தலைவர்கள் ராஜேஸ்ராஜப்பா, கோதண்டபாணி, மாநில பொதுக்குழு உறுப்பினர் பெரியசாமி, மகிளா காங்கிரஸ் புவனேஸ்வரி, மண்டல தலைவர் அய்யூப்அலி, மாவட்ட சிறுபான்மைதுறை தலைவர் சுரேஷ், துணை தலைவர் பாட்சா, பொதுச் செயலாளர்கள் கண்ணப்பன், கனகராஜ், வின்சென்ட், சாகுல்அமீது, முகமதுஅர்சத், நெசவாளர் அணி மாவட்ட தலைவர் மாரிமுத்து, தங்கவேல், ராஜகோபால், பாலச்சந்தர், கோமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>