ஈரோடு வழியாக இயக்கிய 4 ரயில்கள் நிறுத்தம்

ஈரோடு, டிச.10: ஈரோடு வழியாக இயக்கப்பட்டு வந்த 4 ரயில்கள் நிறுத்தப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை துணை தலைவர் பாஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாகர்கோவில் மும்பை, மும்பை நாகர்கோவில், நெல்லை தாதர், தாதர் நெல்லை ஆகிய 4 ரயில்கள் ஈரோடு வழியாக பல ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்தது. இது ஈரோடு மாவட்ட மக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருந்து வந்தது. இந்நிலையில் திடீரென்று இந்த ரயில்கள் ஈரோடு வழியாக இயக்கப்படுவதற்கு பதிலாக நாமக்கல் வழியாக இயக்க ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது கடும் கண்டனத்திற்குரியது.தெற்கு ரயில்வேயில் அதிக வருவாய் ஈட்டித்தருவது ஈரோடுதான். இந்த சூழலில் ஈரோடு மாவட்ட மக்களுக்கு எதிராக ரயில்வே நிர்வாகம் செயல்பட்டுள்ளது. எனவே, ரயில்வே நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையை கண்டித்து வரும் 12ம் தேதி காலை 10 மணிக்கு ஈரோடு காளைமாடு சிலை அருகில் காங்கிரஸ் சிறுபான்மை துறை மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்பாட்டத்தை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரவி துவக்கி வைக்கிறார்.  இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>