சத்தி, பவானிசாகர், தாளவாடியில் வார்டு உறுப்பினர் பதவிக்கு 14 பேர் வேட்பு மனு தாக்கல்

சத்தியமங்கலம், டிச.10: சத்தி, பவானிசாகர், தாளவாடி ஒன்றியங்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 14 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் ஊரகப் பகுதிகளில் கிராமப்புற ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு நேற்று முதல் வேட்புமனு தாக்கல் துவங்கி உள்ளது. இதற்காக, அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கும், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கும் வேட்புமனுக்கள் பெறப்படுகிறது. இதேபோல், கிராம ஊராட்சி அலுவலகங்களில் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும் வேட்புமனுக்கள் பெறப்படுகிறது.நேற்று சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொமாரபாளையம் ஊராட்சியில் வார்டு உறுப்பினர் பதவிக்கு 8 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதேபோல், பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்தில் உத்தண்டியூர் ஊராட்சியில் ஒரு வேட்புமனுவும், ஊராட்சியில் ஒரு வேட்புமனுவும் என 2 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இதேபோல், தாளவாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இக்கலூர் ஊராட்சியில் வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 வேட்பு மனுக்களும், ஆசை நகராட்சியில் 2 வேட்பு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சத்தியமங்கலம், பவானிசாகர் மற்றும் தாளவாடி ஆகிய 3 ஊராட்சி ஒன்றியங்களில் நேற்று மொத்தம் 14 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>