மொடக்குறிச்சி அருகே குடில் அமைத்து கூட்டு பிரார்த்தனை

மொடக்குறிச்சி, டிச.10:  சோலார் அருகே நடந்த கந்தூரி விழாவில் ஏராளமான இஸ்லாமியர்கள் குடில்கள் அமைத்து கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு லக்காபுரம் பகுதியில் திடீரென தாக்கிய கொடிய நோயால் ஏராளமானோர் உயிரிழந்தனர். இதையடுத்து, ஊரின் எல்லையில் சென்று விரதம் இருந்து சமையல் செய்து கூட்டுப் பிரார்த்தனை செய்து உணவு அருந்தினால் கொடிய நோய்கள் தீரும் என முன்னோர்கள் கூறி உள்ளனர்.

இதனால், கடந்த பல ஆண்டுகளாக கார்த்திகை மாதம் திங்களன்று சோலார் அடுத்த போக்குவரத்து நகர் பகுதியில் இஸ்லாமியர்கள் ஒன்றுகூடி சமைத்து கூட்டுப் பிரார்த்தனை செய்து வருகின்றனர். அதன்படி, நேற்று சோலார், போக்குவரத்து நகரில் கந்தூரி விழா நடந்தது. இந்த விழாவில் ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருப்பூர், கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் குடும்பத்துடன் குடில்கள் அமைத்து சமைத்து கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இந்த கூட்டு பிரார்த்தனையை முகமது உஸ்மான் துஆ ஓதி துவக்கி வைத்தார்.

இந்த கூட்டுப் பிரார்த்தனையில் பழங்கள் மற்றும் உணவுகளை வைத்து கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

Related Stories:

>