சாலையோர குப்பைகள் அகற்றம்

ஈரோடு, டிச.10:  ஈரோடு 15 தமிழ்நாடு பட்டாலியன் தேசிய மாணவர்படை மாணவ, மாணவிகள் ஓட்டம் மற்றும் நடைப்பயிற்சியின்போது பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தூய்மை பணியை மேற்கொண்டனர்.ஈரோடு சிக்கய்யநாயக்கர் கல்லூரியில் துவங்கிய இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் உதயகுமார் தலைமை தாங்கினார். சுகாதார அலுவலர் முகமதுஇக்பால் துவக்கி வைத்தார். கமாண்டிங் அதிகாரி ஹென்றி ராபர்ட், கேப்டன் கவிதா, நியாசுதீன், நளினி, லெப்டினன்ட் கார்த்திகேயன், சுபேதார் மேஜர் ராஜசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கேப்டன் மகுடீஸ்வரன் நன்றி கூறினார்.மாணவ, மாணவியர்கள் சூளை, பெரியசேமூர், கனிராவுத்தர்குளம் வழியாக 15 தமிழ்நாடு பட்டாலின் வளாகம் வரை தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.

Related Stories:

>