வாட்டர் மேன் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது

திருப்பூர், டிச.10: கரூர் மாவட்டத்தை சேர்ந்த ராமச்சந்திரன் (44). கடந்த சில ஆண்டுகளாக திருப்பூர் பெரிச்சிபாளையம் பகுதியில் தங்கி, மாநகராட்சியில் வாட்டர் மேனாக வேலை செய்து வந்தார். கடந்த 1ம் தேதி காலை திருப்பூர் தாராபுரம் சாலை சங்கிலிப் பள்ளம் ஓடை அருகில் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார். பின்னர், அவரது உடல் மீட்கப்பட்டு திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து, புதுக்கோட்டையை சேர்ந்த சமயபாண்டி (22), கும்பகோணத்தை சேர்ந்த பிரதாப் (28) ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ராஜபாண்டி (20) என்பவரைத் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ராஜபாண்டியை அவரது சொந்த ஊரில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மூவரும் சேர்ந்த ராமச்சந்திரனைத் தாக்கி பணம், நகை உள்ளிட்டவற்றை பறித்து விட்டு தப்பியது குறிப்பிடத்தக்கது. இவரை, தெற்கு போலீசார் நேற்று கோர்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Advertising
Advertising

Related Stories: