×

மெஞ்ஞானபுரத்தில் டெங்கு விழிப்புணர்வு பேரணி

உடன்குடி, டிச. 10: மெஞ்ஞானபுரம் ஜான்தாமஸ் கல்வியியல் கல்லூரி சார்பில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் பேரணி நடந்தது.
 தலைமை வகித்த வட்டார மருத்துவ அலுவலர் அனிபிரிமின், டெங்கு பாதிப்பை தடுக்கும் விதம், வீடு மற்றும் சுற்றுப்புறங்களை சுகாதாரமாக வைப்பதில் பெண்களின் பங்கு குறித்துப் பேசினார். முன்னிலை வகித்த கல்லூரி முதல்வர் ஜெபசெல்வி அற்புதசீலி வரவேற்றார். இதைத்தொடர்ந்து டெங்கு விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில், சுகாதார ஆய்வாளர் சேதுபதி, பகுதி சுகாதார செவிலியர் ஜெபசீலி, கிராம சுகாதார செவிலியர்கள், பயிற்சி சுகாகார ஆய்வாளர்கள், மஸ்தூர் பணியாளர்கள், கல்லூரி மாணவிகள், ஆசிரியர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags : Dengue awareness rally ,Manganapuram ,
× RELATED கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை...