வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில்

வேலூர், டிச.10: வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு வீடுகள் மட்டுமின்றி மலைகள் மற்றும் திருக்கோயில்களில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. இன்று கார்த்திகை தீப பெருவிழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. திருவண்ணாமலை அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. அதேபோல் வேலூர் மாவட்டத்தில் வேலூர் சார்பனாமேடு, சலவன்பேட்டை, சைதாப்பேட்டை, காகிதப்பட்டறை, சத்துவாச்சாரி மலை உச்சிகளில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. கார்த்திகை தீபத்தை முன்னிட்டு வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயில் காலையில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. தொடர்ந்து மாலை 6 மணியளவில் வேலூர் சார்பனாமேடு கோட்டை மலை உட்பட சலவன்பேட்டை மலை, பகவதிமலை, சைதாப்பேட்டை மலை, காகிதப்பட்டறை மலை, சத்துவாச்சாரி மலை உச்சிகளில் அந்தந்த பகுதி இளைஞர்களால் வீடுகளில் சேகரிக்கப்படும் எண்ணையை கொண்டு மகா தீபம் ஏற்றி வைக்கப்படுகிறது.

அதேபோல் இடையன்சாத்து, பாலமதி, மூஞ்சூர்பட்டு, கணியம்பாடி, பாலாத்துவண்ணான் மலைகளிலும், பிரம்மபுரம் பிரசன்ன வெங்கடேசபெருமாள் கோயில் மலை, ரத்தினகிரி, வள்ளிமலை, தீர்த்தகிரி, திமிரி குமரகிரி மலைகளிலும், திருவலம் வில்வநாதீஸ்வரர் கோயில், காஞ்சனகிரி, சோளிங்கர் மலைகளிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. மேலும் அணைக்கட்டு, பள்ளிகொண்டா, ஒடுகத்தூர், ஆம்பூர், குடியாத்தம் சேத்துவண்டை, பாக்கம், மீனூர், கைலாசகிரி, பச்சக்குப்பம், ஏலகிரி, நாட்றம்பள்ளி மலைகளிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. அதோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் மற்றும் முருகன் கோயில்களில் கார்த்திகை தீப நாள் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடக்கின்றன.

Related Stories:

>