×

திருவண்ணாமலையில் தொடர் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கேங்மேன் பதவிக்கு உடற்தகுதி தேர்வுகான தேதி அறிவிப்பு

திருவண்ணாமலை, டிச. 10: திருவண்ணாமலையில் பெய்த தொடர்மழை காரணமாக கேங்மேன் பதவிக்கான உடற்தகுதி தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. ஒத்தி வைக்கப்பட்ட தேதிகளில் நடைபெற விருந்தவர்களுக்கான உடற்தகுதி தேர்வுக்கு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருவண்ணாமலை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அ.நாகராஜன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், திருவண்ணாமலை மின் பகிர்மான வட்டத்தில் கேங்மேன்(பயிற்சி) பதவிக்கான உடற்தகுதி தேர்வு நடைபெற்று வருகிறது. ஏற்கனவே தொடர் மழை காணமாக கடந்த 30ம் தேதி அன்று நடைபெறவிருந்த தேர்வு வரும் 14ம் தேதியும், கடந்த 2, 3ம் தேதிகளில் நடைபெறவிருந்த தேர்வு வரும் 16ம் தேதி மற்றும் 17ம் தேதிகளில் நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Announcement ,fitness selection ,Gangman ,Thiruvannamalai ,
× RELATED பிளாக்பஸ்டர் பார்டர்-கவாஸ்கர் டிராபி:...