×

வேதாரண்யத்தில் 33 ஆண்டுகளுக்கு பிறகு தலைவர் பதவிக்கு வாக்களிக்கும் மக்கள்

வேதாரண்யம், டிச.10: வேதாரண்யம் தாலுகாவில் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் நேற்று வேதாரண்யம் மற்றும் தலைஞாயிறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துவங்கியது. வேதாரண்யத்தில் 36 ஊராட்சியும், தலைஞாயிறில் 24 ஊராட்சியும், நான்கு மாவட்ட கவுன்சிலர்களுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது. இந்நிலையில் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கருப்பம்புலம் ஊராட்சி மன்ற தலைவருக்கான தேர்தலில் சுப்புராமன் என்பவர் வேட்பு மனுதாக்கல் செய்தார். இந்த ஊராட்சியில் 1959 ஆண் வாக்களர்களும், 1950 பெண் வாக்களர்களும் உள்ளனர்.
இந்தஊராட்சியில் கடந்த 1986 ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதன்பிறகு நடைபெற்ற 4 உள்ளாட்சித் தேர்தல்களிலும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இரண்டு முறை பொது வேட்பாளரும், இரண்டு முறை ஆதிதிராவிடர் வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தற்போது ஊராட்சி மன்ற தலைவருக்கு பொது வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டநிலையில், அப்பகுதி இளைஞர்கள் ஆர்வமுடன் வேட்புமனுவை தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில் வேட்புமனுதாக்கல் செய்த சுப்புராமன் இன்றே வாக்குசேகரிக்கும் பணியில் ஈடுபட்டார்.

Tags : Vedanta ,
× RELATED வேதாரண்யத்தில் அறிவியல் இயக்கத்தின் துளிர் தேர்வு