×

திரளான பக்தர்கள் தரிசனம் துலாக்கட்டம் செல்லும் தெருவில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி வர்த்தக சங்கத்தினர் போராட்டம்

மயிலாடுதுறை, டிச.10: துலாக்கட்டம் செல்லும் தெருவில் திறந்த டாஸ்மாக் கடையை மூடக்கோரி வர்த்தக சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தையும் மீறி போலீசார் பாதுகாப்புடன் கடை திறக்கப்பட்டது. நாகை மாவட்டம் மயிலாடுதுறை நகர் மகாதானத்தெரு என்பது காவிரியில் புனித நீராடல் நடைபெறும் துலாக்கட்டத்திலிருந்து மயூரநாதர் கோயிலுக்குச் செல்லும் தெருவாகும். மயூரநாதர் ஆலயத்திலிருந்து சுவாமி புறப்பாடு என்பது ஐப்பசி மாதம் 30 நாளும் மட்டுமில்லாமல் அவ்வப்பொழுது சுவாமிகள் வீதியுலா நடத்துவது வாடிக்கை. புகழ்பெற்ற இந்த தெருவில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாகி உள்ள நிலையில், நேற்று முன்தினம் திடீரென டாஸ்மாக் கடை ஒன்று திறந்து விற்பனையை ஆரம்பித்துள்ளது.
ஏற்கனவே இரண்டு கடைகளால் மயிலாடுதுறை நகரமே போதையில் தள்ளாடுகிறது. தற்பொழுது மூன்றாவதாக கடையை திறந்தது அப்பகுதி மக்களையும் பக்தர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த ஜனவரி 28ம் தேதி இதே இடத்தில் அரசு அதிகாரிகள் டாஸ்மாக் கடை திறக்க முயற்சித்தபோது அப்பகுதி மக்களின் போராட்டத்தால் கடை திறப்பு கைவிடப்பட்டது. மகாதானத்தெருவில் 5க்கும் மேற்பட்ட திருமணக் கூடங்கள், 3க்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்கள் தனியார் மருத்துவமனைகள் போன்றவைகள் இருப்பதால் அப்பகுதியில் டாஸ்மாக் கடையை திறக்கவிடாமல் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் இறங்கினர். ஓராண்டு ஆவதற்குள் நேற்று முன்தினம் மாலை திடீரென இப்பகுதியில் டாஸ்மாக் கடையை திறந்துள்ளது, வேதனைக்குறியது என்றும் உடனடியாக கடையை மூடவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வர்த்தக சங்க தலைவர் செந்தில்வேல் தலைமையில், கண்ணன், ஜெயக்குமார், மதியழகன், அய்யாசாமி உட்பட 100க்கும் மேற்பட்டோர் மகாதானத்தெரு பகுதியிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு டாஸ்மாக் கடை முன்பு சிறிதுநேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு ஊர்வலமாக சென்றுனர். அப்போது வழிநெடுக உள்ள கடைகளில் உள்ளவர்களும் இந்த ஊர்வலத்தில் இணைந்து கொண்டனர். ஆர்டிஓ அலுவலகம் முன் சிறிதுநேரம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்பிறகு புதியதாக பொறுப்பேற்றுக் கொண்ட ஆர்டிஓ மகாராணியிடம் புகார் மனுவை அளித்தனர்.

அதில் அதில் தெரிவித்த கோரிக்கையில் சில,’ மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அரசு மதுபானக்கடையை பொதுமக்கள் நலன்கருதி காலிசெய்ய உத்தரவிடவேண்டும், கடந்த ஜனவரி 28ம் தேதி கோட்டாட்சியர் தேன்மொழி இதை ஏற்று கடைதிறப்பதை நிறுத்தி வைத்திருந்தார். தற்பொழுது அதே இடத்தில் மதுக்கடையை திறந்திருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நாராயணபிள்ளை வணிகர்நல சங்கம், மாயூரநாதர் திருக்கோயில் நிர்வாகம், டிபிடிஆர் மேனிலைப்பள்ளி, தியாகிநாராயணசாமி மேனிலைப்பள்ளி, ஜும்மா பள்ளிவாசல், ஜெயின்சங்கம், சிர்வர் மெட்ரிக் மேனிலைப்பள்ளி போன்ற நிர்வாகங்கள் ஆட்சேபனை கடிதம் அளித்துள்ளன, ஆகவே இக்கடையை அகற்றவேண்டும் என்று அதில் தெரிவித்திருந்தனர்.

Tags : street ,devotees ,shop closing struggle ,
× RELATED நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற...