கடையநல்லூர் அருகே வாறுகால் வசதி இல்லாததால் மழைநீர் தேங்கி சுகாதார கேடு

கடையநல்லூர், டிச.10: கடையநல்லூரை அடுத்த சுந்தரேசபுரத்தில் மெயின்ரோட்டில் வாறுகால் வசதி இல்லாததால் மழைநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. சங்கரன்கோவில் யூனியன் அரியநாயகிபுரம் ஊராட்சி சுந்தரேசபுரத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மேலும் இந்த சாலையை கடையநல்லூரிலிருந்து சங்கரன்கோவில் செல்வதற்கு ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை பல மாதங்களாக குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.  

இந்நிலையில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக குண்டும் குழியுமாக உள்ள சாலையில் மழைநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், இப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் சுந்தரரேசபுரம் மெயின்ரோட்டில் வாறுகால் வசதி இல்லாததால் சாலையில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. மேலும் மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி மர்ம காய்ச்சல் பரவுகிறது. பள்ளி குழந்தைகள் ஏராளமானோர் சென்று வருகின்றனர். கொசுக்களை கட்டுப்படுத்த புகைமருந்து அடிக்க வேண்டும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை மனுக்கள் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இந்த சாலையை சீரமைத்து வாறுகால் வசதி உடனடியாக அமைத்து தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: