சரள் மண் கடத்திய 4 பேர் கைது

திருவேங்கடம்,டிச.10: திருவேங்கடம் தாலுகா வரகனூருக்கு மேற்கே உள்ள உப்பு ஓடையில் சரள் மண் கடத்துவதாக திருவேங்கடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து எஸ்ஐ சத்தியவேந்தன் தலைமையில் 6 போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு 2 டிராக்டரில் ஒரு ஜேசிபி இயந்திரம் மூலமாக சிலர் சரள் மண் அள்ளிக்கொண்டிருந்தனர்.

உடனே திருவேங்கடம் எஸ்ஐ சத்தியவேந்தன் சரள் மண் கடத்தலில் ஈடுபட்ட டிராக்டர் டிரைவர்கள் வரகனூர் தெற்கு தெருவை சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் கோபால்சாமி(47), நடுத்தெருவை சேர்ந்த கோபால்சாமி மகன் நாகராஜ்(43), டிராக்டர் உரிமையாளர் வரகனூர் நடுத்தெருவை சேர்ந்த சீனிராஜ்(66), ஜேசிபி டிரைவர் செவல்பட்டி பசும்பொன் நகரை சேர்ந்த சங்கரன் மகன் நாகராஜ்(20) ஆகியோரை கைது செய்தார். தப்பியோடிய மற்றொரு டிராக்டர் உரிமையாளர் வரகனூர் நடுத்தெருவை சேர்ந்த பாலமுருகனை(50) தேடிவருகின்றனர். மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 டிராக்டர்கள், ஜேசிபி இயந்திரத்தை பறிமுதல் செய்தனர்.

Related Stories:

>