மக்கள்குறை தீர்ப்பு முகாம்

செங்கோட்டை, டிச.10: செங்கோட்டை அருகே வல்லத்தில் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ அபுபக்கர் தலைமையில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடந்தது. முகாமில் வல்லம், பிரானூர் பார்டர், சுமை தீர்ந்தபுரம் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கை மனுக்களை எம்எல்ஏவிடம் அளித்தனர். முகாமில் முதியோர் ஓய்வூதியம், இலவச வீடு, சாலை வசதி உள்ளிட்ட 200க்கும் மேற்ப்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.

Advertising
Advertising

முகாமில் ஊராட்சி கழக செயலாளர் சேக் அப்துல்லா, திமுக மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் திவான் ஒலி, துரையப்பா, மைதீன் பிச்சை, முஸ்லிம் லீக் இளைஞரணி கடாபி, ரெசவு முகைதீன், அகமது, செய்யது சுலைமான், திவான், பத்மநாபன், முத்துமீரான், கோமதிநாயகம், ஐயப்பன், முத்துக்குமார், செல்வம், மாரியப்பன், ராமர், ராஜ், சுலைமான், பெரோஸ்கான் ஜேம்ஸ், சுரேஷ், பீர்முகமது மற்றும் சமுதாய தலைவர்கள் உட்பட அனைத்து கட்சி பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

Related Stories: