சிவந்திபுரம் ஊராட்சியில் முறையான ஊதியம் கேட்டு துப்புரவு பணியாளர்கள் மனு

நெல்லை, டிச.10: தேர்வு நிலை ஊதியம் வழங்க கோரி விகே.புரம் அருகே சிவந்திபுரம் துப்புரவு பணியாளர்கள் நேற்று மனு அளித்தனர். அம்மனு விபரம்: சிவந்திபுரம் ஊராட்சியில் கடந்த 2006ம் ஆண்டு முதல் தொகுப்பூதிய பணியாளர்களாக வேலை செய்து வருகிறோம். இன்றைய நாள் வரை எங்களுக்கு சம்பள சீட்டு மற்றும் வருடாந்திர உயர்வு, சோப்பு முறையாக வழங்கப்படுவதில்ைல. அரசு ஆணைப்படி சீருடை தைப்பதற்கான கூலியை வங்கி கணக்கில் செலுத்துவதும் இல்லை. 10 ஆண்டுகளாக பணி முடித்தவர்களுக்கு தேர்வு நிலை ஊதியமும் வழங்கப்படுவதில்லை. மேலும் ஊதிய உயர்வும் இல்லை. பணி செய்வதற்கான உபகரங்களும் வழங்கப்படுவதில்லை. எனவே எங்கள் பிரச்னைகளுக்கு உரிய தீர்வு காணும்படி கேட்டு கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: