சோனியா பிறந்தநாள் விழா

கடையநல்லூர், டிச. 10: கடையநல்லூரில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் 73வது பிறந்த நாளை முன்னிட்டு அக்கட்சியினர் கொடியேற்றி, பட்டாசு வெடித்து கேக் வெட்டி கொண்டாடினர். கடையநல்லூர் மணிக்கூண்டு அருகில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட பொது செயலாளர் கணேசன் தலைமை வகித்தார். மாவட்ட பொது செயலாளர் முருகேசன், மாவட்ட செயலாளர் பட்டு, இளைஞர் காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் ராகுல்காந்தி முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத்தலைவர் சிவராமகிருஷ்ணன் கொடியேற்றி கேக் வெட்டினார். நிர்வாகிகள் இசக்கி, ஆசாத், சேகனா, குமாரசாமி பாண்டியன், சிவபெருமாள், நத்தடுபாவா, வாழப்பாடி மாரி, ராமர்பாண்டி, சுப்பையாபாண்டியன், மருதையா உட்பட பலர் கலந்து கொண்டனர். ரமேஷ் நன்றி கூறினார்.

திசையன்விளை: திசையன்விளை நகர காங்கிரஸ் சார்பில் சோனியாகாந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. நகர தலைவர் ராஜன் தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் விஜயபெருமாள், வட்டார தலைவர் ஜார்ஜ், மாவட்ட பொது செயலாளர் குமார், ஓ.பி.சி. மாவட்ட தலைவர் ஜாண் கென்னடி முன்னிலை வகித்தனர். மாநில விவசாய அணி செயலாளர் விவேக்முருகன் கொடியேற்றி இனிப்பு வழங்கினார். முன்னாள் கவுன்சிலர்கள் ஆல்பர்ட், நடராஜன், முன்னாள் நகர தலைவர் முத்து, வர்த்தக பிரிவு மாவட்ட செயலாளர் அந்தோனிராஜ், துணை தலைவர் ஐசக், எஸ்.சி.பிரிவு வட்டார தலைவர் ராஜபாண்டி, ஸ்ரீரங்கன், பாபா தனசிங் உட்பட பலர் கலந்து கொண்டனர். நகர செயலாளர் சங்கர் நன்றி கூறினார்.

Related Stories:

>