மேலகரத்தில் ரூ.3.3 கோடியில் புதிய தார் சாலை பணிகள்

தென்காசி, டிச. 10: தென்காசியை அடுத்த மேலகரம் பேரூராட்சியில் 20190-2020ம் ஆண்டு மூலதன மான்ய திட்டத்தின் கீழ் 3 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தார் சாலை பணிகளை செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. துவக்கி வைத்தார். மேலகரம் பேரூராட்சி எழில்நகர் மற்றும் எழில்நகர் விரிவாக்கம் பகுதிகளில் 1 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், மின்நகர் மற்றும் மின்நகர் விரிவாக்கம் பகுதிகளில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், இந்திராநகர் மற்றும் ராமர் கோவில், அக்ரகாரம் பகுதியில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் தார் சாலைப்பணிகளுக்காக இப்பகுதி பொதுமக்களின்  கோரிக்கைகயை ஏற்று செல்வமோகன்தாஸ்பாண்டியன் எம்.எல்.ஏ. நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மேலகரம் பேரூர் செயலாளர் வக்கீல் கார்த்திக்குமார், பேரூராட்சி மன்ற செயல்அலுவலர் பதுர்நிஷா, ஒன்றிய செயலாளர் சங்கரபாண்டியன், அண்ணா தொழிற்சங்க மாவட்ட  துணை செயலாளர் நெல்லை முகிலன், பேரூர் செயலாளர்கள் மயில்வேலன், கணேஷ் தாமோதரன், அரசு வக்கீல் சின்னத்துரை பாண்டியன், இலஞ்சி அன்னமராஜா, சிந்தாமணி காமராஜ், வெள்ளகால் ரமேஷ், வார்டு செயலாளர்கள் வெங்கடேஸ்வரன், பழனி, முருகையா, பாலகிருஷ்ணன், சேகர், முருகசாமி, ராஜா, செல்வராஜ், பண்டாரம், வக்கீல் செல்லத்துரை, சுப்பிரமணியன், இசக்கி, செந்தில், பழனி, கார்த்திக், தென்காசி நகர செயலாளர் சுடலை, ஒப்பந்தக்காரர் சண்முகவேலு, குற்றாலம் சுரேஷ், பெரியபிள்ளைவலசை வேம்பு என்ற ரவி, சின்னத்தம்பி, அமுல்ராஜ், மகரிஷி பள்ளி தாளாளர் முத்தையா, முதல்வர் ஆரியமாலா, சீதையம்மாள், சுமித்ரா, முருகன், தேனாண்டாள் நாச்சியப்பன், பேரூராட்சி மன்ற பணியாளர்கள் முத்துப்பாண்டி, தங்கராஜ், முப்புடாதி, இசக்கி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>