×

சூறை காற்று கன்னியாகுமரியில் படகு சேவை பாதிப்பு

கன்னியாகுமரி, டிச.10: சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் ஐயப்ப பக்தர்கள் சீசனையொட்டி தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவர்கள் திரிவேணி சங்கமத்தில் நீராடி, பகவதியம்மன் கோயிலில் தரிசனம் செய்கின்றனர். பின்னர் கடல் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு படகில் சென்று கண்டு ரசிக்கின்றனர். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகு சேவை நடத்தி வருகிறது. இந்நிலையில் கடலில் சூறை காற்று காரணமாக நேற்று கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. இதனால் நேற்று காலை படகு சேவை தொடங்கவில்லை. இதையடுத்து அதிகாலையிலேயே டிக்கெட் எடுப்பதற்காக நீண்ட வரிசையில் நின்ற சுற்றுலா பயணிகளும், ஐயப்ப பக்தர்களும் ஏமாற்றம் அடைந்தனர். பின்னர் நேற்று மதியம் 1.30 மணியளவில் சூறைக்காற்று மற்றும் கடல் சீற்றம் குறைந்ததையடுத்து படகு சேவை தொடங்கி நடந்தது.

Tags : Hurricane Katrina ,
× RELATED அஞ்சுகிராமத்தில் சூறைகாற்றுக்கு 1500 வாழைகள் முறிந்து சேதம்