×

திங்கள்நகரில் கட்டப்படுவது புதிய பேருந்து நிலையமா? வணிகவளாகமா? காங்கிரஸ் கண்டனம்

திங்கள்சந்தை டிச,10: திங்கள்நகர் ேதர்வுநிலைப்பேரூராட்சிகுட்பட்ட பேருந்து நிலையம் மூன்று பகுதிகளாக கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்தது. தற்போதைய பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிப்பாலும் மினிபஸ்களின் ஆக்கிரமிப்பாலும் பேருந்து நிலையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பயணிகள் அவதிப்பட்டு வந்தனர். அதோடு நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளின் அதிகரிப்பால் திங்கள் நகர்-குளச்சல் சாலை, தலக்குளம் சாலையில் கடும் நெருக்கடி ஏற்பட்டது இப்போக்குவரத்து நெருக்கடிைய சீர் செய்யவும் பேருந்துநிலையத்தை விரிவுபடுத்தி நவீன பேருந்துநிலையம் அமைக்கவும் பொதுமக்கள் மற்றும் தொகுதி எம்எல்ஏ பிரின்ஸ் ஆகியோர் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தனர். அதன் பயனாக அரசு மேற்படி பழைய பேருந்துநிலையத்தை அகற்றி விட்டு அதே பகுதியில் ஒ ருங்கிணைந்த புதிய பேருந்து நிலையம் அமைக்க q 5 கோடியே 50 லட்சம் ஒதுக்கீடு செய்தது. அதற்கான பணியும் கடந்த 8 மாதங்களாக மும்முரமாக நடந்து வருகிறது.

ஆனால் எந்த காரணத்திற்காக புதிய பேருந்து நிலையம் அமைக்க மக்கள் கோரிக்கை விட்டார்களோ அதற்கு எதிர்மாறாக பேருந்துநிலையத்தில் கட்டிட பணிகள் நடந்து வருகிறது. வழக்கமாக பேருந்து நிலையங்கள், பேருந்துகள் உள்ளே வந்து செல்லவும், அனைத்து பேருந்துகளும் நின்று பயணிகளை ஏற்றி இறக்க வசதியாக தான் கட்டப்படும். குறிப்பாக பேருந்து நிலையத்தினுள் பேருந்துகளின் எண்ணிக்கையை விட கடைகளின் எண்ணிக்கை மிக குறைவாகதான் இருக்கும். பயணிகளுக்கு போதிய இடவசதி பேருந்து நிலையத்தினுள் செய்து கொடுக்கப்படும். தற்போது திங்கள்நகர் பேருந்து நிலையத்தில் வரும் பேருந்துகளின் எண்ணிக்கையை விட இருமடங்கு அதிக கடைகள் கட்டப்பட்டுள்ளது. அதோடு இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் கட்டப்படவில்லை. சுமார் 50 பேருந்துகள் பேருந்து நிலையத்திற்கு வருகிறது என்றால் தற்போது சுமார் 90 கடைகளுக்கு மேல் கட்டப்பட்டுள்ளது.

இதனால் பேருந்து நிலைய பரப்பளவு கடைகளின் ஆக்கரமிப்பால் சுருங்கி உள்ளது. இதனால் இப்புதிய பேருந்து நிலையத்தில் மீண்டும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். எந்த காரணத்திற்காக புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டதோ அதற்கு மாறாக வணிகவளாக நோக்கில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. பேரூராட்சி நிர்வாகம் மக்கள் நலனில் அக்கரை கொள்ளாமல் தங்கள் வருமானத்தை குறிக்கோளாக கொண்டு திட்டமிட்டு வரைபடம் தயாரித்து புதிய பேருந்து நிலையம் என்ற பெயரில் வணிக வளாகம் அமைக்கிறது. என மாநில காங்கிரஸ் ஒபிசி பொதுச்செயலாளர் ஆன்றோ அலெக்ஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Tags : bus station ,Congress ,
× RELATED பாராளுமன்ற தேர்தலையொட்டி ஓசூர் பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதல்