போதையில் வந்ததை தட்டிக்கேட்டதால் மாமனாருக்கு சரமாரி கத்திக்குத்து

தண்டையார்பேட்டை: போதையில் வீட்டிற்கு வந்ததை தட்டிக்கேட்டதால் மாமனாரை கத்தியால் குத்திய மருமகனை போலீசார் தேடி வருகின்றனர். வண்ணாரப்பேட்டை சஞ்சீவிராயன் கோயில் தெருவை சேர்ந்தவர் திருப்பதி (52). இவரது மருமகன் சசிகுமார் (26). கூலி வேலை செய்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு கஞ்சா போதையில் வீட்டுக்கு வந்ததால், மாமனார் திருப்பதி கடுமையாக திட்டியுள்ளார். இதன்பிறகு இருவரும் தூங்க சென்றுவிட்டனர்.

Advertising
Advertising

நள்ளிரவில் சசிகுமார் எழுந்து பார்த்தபோது திருப்பதி அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். அவர் மீது ஆத்திரம் தணியாமல் இருந்த சசிகுமார், வீட்டில் இருந்த கத்தியை எடுத்துவந்து திருப்பதியின் இடது கை, காது, முதுகு பகுதிகளில் சரமாரி குத்திவிட்டு தப்பினார். திருப்பதியின் அலறல் சத்தம் கேட்டு குடும்பத்தினர் ஓடிவந்து, ரத்த வெள்ளத்தில் கிடந்த திருப்பதியை மீட்டு உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றிய புகாரின்பேரில், தண்டையார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சசிகுமாரை தேடி வருகின்றனர். மாமனாரை மருமகன் கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: