தண்டையார்பேட்டை பஸ் நிறுத்தத்தில் 2 பேரை கத்தியால் குத்தி 11 ஆயிரம் பறிப்பு

தண்டையார்பேட்டை: பஸ் நிறுத்தத்தில் பேசிக்கொண்டிருந்த  வாலிபர்களை கத்தியால் குத்தி, ரூ.11 ஆயிரத்தை பறித்து சென்ற 4 மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தண்டையார்பேட்டை, தண்டையார் நகரை சேர்ந்தவர் சந்துரு (23) எண்ணூர், சத்தியவாணி முத்து நகரை சேர்ந்தவர் காமேஷ்  (25) காசிமேடு, அமராஞ்சிபுரத்தை சேர்ந்தவர் லெனின் (25). நண்பர்களான இவர்கள் மூவரும், நேற்று  அதிகாலை, தண்டையார்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் பேசி கொண்டிருந்தனர்.

Advertising
Advertising

அப்போது ஹெல்மட் அணிந்து, 2 பைக்குகளில் வந்த  4 மர்ம நபர்கள், அவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி, பணம், நகையை கேட்டனர். அவர்கள் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த ஆசாமிகள், காமேஷ், லெனின் ஆகியோரை கத்தியால் குத்தி விட்டு, அவரிடமிருந்த ரூ.11 ஆயிரம், ஏ.டி.எம் கார்டு ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து  புதுவண்ணார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: