காதலுக்கு எதிர்ப்பு விவகாரம் கோஷ்டி மோதலில் 8 பேருக்கு வெட்டு

தண்டையார்பேட்டை: வியாசர்பாடியில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 8 பேருக்கு சரமாரி வெட்டு விழுந்தது. வியாசர்பாடி உதயசூரியன் நகரை சேர்ந்தவர் காரல்மாக்ஸ் (23). அதே பகுதியை சேர்ந்தவர் சுப்புலட்சுமி (19). தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர்களிடையே ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. இந்த விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வந்ததால், பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்த 6 மாதங்களுக்கு முன் இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, ஊர் தலைவர் முன்னிலையில் பஞ்சாயத்து செய்து வைக்கப்பட்டது.

Advertising
Advertising

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இரண்டு குடும்பத்துக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். கத்தியாலும் வெட்டிக் கொண்டனர். இதில் சுப்புலட்சுமியின் உறவினர்கள் 5 பேரும், காரல்மாக்ஸ் உறவினர்கள் 3 பேரும் படுகாயமடைந்தனர். இவர்களை உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து எம்கேபி.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 10 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: