×

பெரியபாளையத்தில் முதல் நாளில் வேட்பு மனு தாக்கல் இல்லை

ஊத்துகோட்டை, டிச.10:  பெரியபாளையத்தில் முதல் நாளில் தேர்தலில் போட்டியிட யாரும்  மனுக்கள் தாக்கல் செய்யாததால் பிடிஓ அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. பெரியபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 2 மாவட்ட கவுன்சிலர், 20 ஒன்றிய கவுன்சிலர், 53 ஊராட்சி தலைவர், 369  வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் வருகின்ற 30ம் தேதி 2-ம் கட்டமாக நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் 9 தேதியான நேற்று  தொடங்கியது. இதில் முதல் நாளான நேற்று ஊராட்சி தலைவர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்கான வேட்பு மனுத்தாக்கல் படிவத்தை குறைந்த அளவுள்ளவர்களே பெற்றுச்சென்றனர்.

இதனால் பெரியபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் மாலை 4 மணிக்கு மேல் பெரியபாளையம் அருகேவுள்ள மதுரவாசல் ஊராட்சி தலைவர் பதவிக்கு குசேலன் என்பவர் மட்டுமே மனுதாக்கல் செய்துள்ளார். வார்டு உறுப்பினர் பதவிக்கு 25 பேர் மட்டுமே மனுதாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. திருத்தணி: இந்நிலையில், நேற்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திருத்தணி ஒன்றிய அலுவலகத்தில் ஒரு மாவட்ட கவுன்சிலர், 12 ஒன்றிய கவுன்சிலர், 27 ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் 219 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள், இதேபோல் திருவாலங்காடு ஒன்றியத்தில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு ஒன்றுக்கும், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 16, ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 42, வார்டு உறுப்பினர் 297 ஆகியவற்றுக்கும் வேட்புமனுக்களை வழங்குவதற்காக அதிகாரிகள் காத்திருந்தனர். ஆனால் ஒரு சிலர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்வதற்காக அலுவலகங்களில் வந்து வேட்பு மனுக்களை பெற்று சென்றனர். நேற்று யாரும் மனு செய்யவில்லை என்று தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.     

Tags :
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்...