×

திருவள்ளூரில் 325 கோடி மதிப்பில் அரசு மருத்துவ கல்லூரி

திருவள்ளூர், டிச. 10: திருவள்ளூரில்  ரூ.325 கோடி மதிப்பில் அரசு மருத்துவ கல்லூரி  அமைய உள்ளது. இதற்கு அனுமதி அளித்த மத்திய,  மாநில அரசுக்கு நன்றி தெரிவிப்பதாக காங்கிரஸ்  எம்.பி., டாக்டர் கே.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் அடுத்த மணவாளநகரில், நேற்று திருவள்ளூர் காங். எம்.பி., டாக்டர் கே.ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தேர்தல் நேரத்தின்போது வாக்காளர்களிடம் அளித்த வாக்குறுதியில், திருவள்ளூரில் மருத்துவக் கல்லூரி அமைக்க பாடுபடுவேன் என்று உறுதி அளித்திருந்தேன். அதனை நிறைவேற்றும் வகையில் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து போராடி, தமிழக முதல்வரின் பரிந்துரையின்பேரில் மருத்துவக் கல்லூரி அமைக்க ஒப்புதல் அளித்ததற்கு, மத்திய, மாநில அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ரூ.325 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள மருத்துவக் கல்லூரிக்கு மத்திய அரசின் நிதி ரூ.195 கோடியும், தமிழக அரசு ரூ.130 கோடியும் ஒதுக்கியுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டுவிழா விரைவில் நடைபெற உள்ளது. மேலும், அனைத்து விரைவு ரயில்களும் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல ரயில்வே துறை அமைச்சரை சந்தித்து முறையிட உள்ளேன். திருவள்ளூர் மாவட்டத்தில் குடிநீர் ஆதாரத்தை பெருக்கவும், நிலத்தடி நீரை உயர்த்தவும் தடுப்பணைகள் கட்ட  நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவேன் என்றும் கூறினார். அப்போது, திருவள்ளூர் வடக்கு மாவட்ட தலைவர் ஏ.ஜி.சிதம்பரம், தெற்கு மாவட்ட தலைவர் பூவை பி.ஜேம்ஸ் மற்றும் மாவட்ட, வட்டார நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags : government ,Tiruvallur ,
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்...