×

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம்

காஞ்சிபுரம், டிச.10: உச்சநீதி மன்ற தீர்ப்பை அடுத்து தமிழகத்தில் மீண்டும் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. ஆனால், புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு தேர்தல் நடக்காததால், காஞ்சிபுரத்தில் வழக்கம் போல் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. கலெக்டர் பொன்னையா  தலைமை வகித்து முதியோர், கல்வி, திருமணம், மாற்றுத் திறனாளிகள், விதவை உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா, பசுமை வீசுகள், குடும்ப அட்டை, பட்டா மாற்றம் உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 200 மனுக்களை பெற்றார்.

இதில், வருவாய்த் துறை சார்பாக சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ்  4 முதியோர் உதவி தொகை ஆணை, ஒரு மாற்றுத்திறனாளி உதவித் தொகை ஆணை, ஒரு விதவை சான்றிதழ், மாற்றுத் திறனாளிகள் நலத்துறைசார்பில் ஒருவருக்கு ₹7500 மதிப்பில் சக்கர நாற்காலி ஆகியவை கலெக்டர் வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) மாலதி, உதவி ஆணையர் (கலால்) ஜீவா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் தனலட்சுமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Kanchipuram district ,
× RELATED குடும்ப பிரச்னையில் மனைவி அளித்த...