×

புதிய செங்கை மாவட்டத்தில் முதல் மக்கள் குறைதீர் கூட்டம்

செங்கல்பட்டு, டிச.10: புதிதாக துவங்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டத்தின் முதல் மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில், நேற்று நடந்தது. கலெக்டர் ஜான்லூயிஸ் தலைமை வகித்தார். இதில், வருவாய் அலுவலர் பிரியா, ஆர்டிஓ செல்வம் உள்பட அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு பகுதிகளில் இருந்து 250 பேர், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தனர். காலை 10 மணிமுதல் மதியம் 2 மணிவரை கலெக்டர், பொதுமக்களிடம் இருந்து நேரடியாக மனுக்களை பெற்றார். அப்போது, வண்டலூர் தாலுகா ஊரப்பாக்கம் ஊராட்சி தலைவர் தமிழ்ச்செல்வன், கிளைச்செயலாளர் மெய்யழகன் உள்பட ஊரப்பாக்கம் வீரபாண்டிய கட்டபொம்மன் நகரை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள், வீட்டு மனை கேட்டு மனு கொடுத்தனர். அதில் 40 ஆண்டுகளாக 700 குடும்பங்கள் வசிக்கிறோம். வீட்டுவரி, தெருவிளக்கு, சாலை வசதி, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு ஆகியவை பெற்றுள்ளோம்.

நாங்கள் குடியிருக்கும் பகுதி நீர் நிலை அருகில் இருப்பதாக கூறி இதுவரை பட்டா வழங்கவில்லை. நீர் நிலைக்கும் குடியிருப்பு பகுதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என ஊரப்பாக்கம் ஊராட்சி மன்றம் சார்பில் பலமுறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும், இதுவரை பட்டா வழங்கவில்லை. இதுதொடர்பாக செங்கல்பட்டு ஆர்டிஓ, கலெக்டரிடம் பலமுறை மனு கொடுத்துள்ளோம். இந்த இடங்களில் குடியிருப்புகளை அகற்ற உள்ளதாகவும், மாறாக குடிசை மாற்று வாரியத்தில் இடம் ஒதுக்குவதாகவும் கூறுகின்றனர். நாங்கள் அங்கு செல்ல மாட்டோம். எங்களுக்கு இதே பகுதியில் விட்டுமனை பட்டா வழங்கவேண்டும் என கூறப்பட்டுள்ளது. அந்த மனுவை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி பரிசீலனை செய்வதாக கலெக்டர் உறுதியளித்தார். இதைதொடர்ந்து, 3 பேருக்கு சாலை விபத்து நிவாரண நிதி தலா ₹1 லட்சம், ஒரு மாற்று திறனாளிக்கு சக்கர நாற்காலி வழங்கினர்.

Tags : meeting ,district ,Chengai ,
× RELATED மணிப்பூரில் காங்கிரஸ் தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு..!!