×

விவசாயிகள் மகிழ்ச்சி திருச்சுழி பகுதியில் கருவேலங் காடான குண்டாறு

திருச்சுழி, டிச. 9: திருச்சுழி பகுதியில் சீமைக்கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பால் குண்டாறு அடையாளம் இழந்து வருகிறது. கழிவுநீர் கலந்து கூவமாக மாறி வருகிறது.     திருச்சுழி பகுதியில் செல்லும் குண்டாறு மதுரை மாவட்டத்தில்  தொடங்கி காரியாபட்டி, திருச்சுழி வழியாக செல்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு வற்றாத ஜீவநதியாக ஓடியது. இடையில் ஏராளமான கண்மாய்களை நிரப்பி, உபரிநீர் கடலில் கலந்தது. இந்த குண்டாறு மூலம் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெற்றது. கடலை, நெல், கரும்பு ஆகியவை இருபோகம் விளைந்தது. இந்நிலையில், கடந்த 15 ஆண்டுகளாக போதிய மழை இல்லாமலும், காரியாபட்டி, திருச்சுழி பகுதிகளில் மணல் அள்ளியதாலும் குண்டாறு குண்டும் குழியுமாக மாறியது. ஆற்றில் நீர்வரத்தின்றி கருவேலமரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இவைகள் கொஞ்சம் நஞ்சம் வரும் நீரையும்  உறிஞ்சுகின்றன. ஆற்றில் நீர்வரத்து இன்மையால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் தரிசு நிலங்களாகவும், பிளாட்களாகவும் மாறியுள்ளன. தற்போது மழை பெய்தாலும் ஆற்றில் தண்ணீர் வருவதில்லை. இதனால், விவசாயம் பாதிக்கப்பட்டு, விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.  


Tags : forest ,Gundara ,region ,Karvelang ,Trichy ,
× RELATED வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லும்...