×

பஸ்மோதி மாணவர் சாவு ஆபத்தான விளையாட்டு கம்பத்தில் கஞ்சாவுடன் 2 பெண்கள் கைது

கம்பம், டிச.9: கம்பத்தில் கஞ்சா விற்பனை செய்த 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.கம்பம் காட்டுப்பள்ளிவாசல் அருகேயுள்ள 18ம் கால்வாய் பகுதியில் கம்பம் வடக்கு இன்ஸ்பெக்டர் சிலைமணி தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சாவை விற்பனை செய்த கம்பம் உலகத்தேவர் தெருவைச் சேர்ந்த மொக்கபிள்ளை(55), விவேகானந்தர் தெருவைச் சேர்ந்த வீரலட்சுமி(38) ஆகியோரிடமிருந்து 2 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

Tags : girls ,
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தம்