×

தமுமுக குற்றச்சாட்டு அதிக மகசூல் பெறுவதற்கு பருத்தி விதைகளில் விதை நேர்த்தி அவசியம்

பரமக்குடி, டிச.9: விவசாயிகள் பருத்தி விதைகளை விதைப்பதற்கு முன்பாக விதைகளை விதை நேர்த்தி செய்து விதைத்தால், அதிக மகசூல் பெற முடியும் என பரமக்குடி விதை பரிசோதனை அலுவலர் சிங்கார லீனா தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகமாக பயிரிடப்படும் பயிர்களில் பருத்தி முக்கியமான பங்கு வகிக்கின்றது. பெரும்பாலும் அதிகளவில் ரகங்களும் குறைந்த அளவு வீரியம் மற்றும் இதர ரகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. எம்சியு 5, 7 ,12,13 மற்றும் எஸ்விபிஆர் 2,13 ரகங்கள் பயிரிடப்படுகின்றன. எம்சியு ரகங்களுக்கு பஞ்சுடன் விதையளவு 15 கிலோவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பருத்தி விதைகளை விதை நேர்த்தி செய்வதால் அதிக மகசூலை பெறமுடியும்.

ஒரு கிலோ பருத்தி விதையை பிளாஸ்டிக் பாக்கெட்டில் போட்டு 100 மில்லி அமிலத்தை ஊற்றவேண்டும் கண்ணாடி அல்லது மர குச்சியால் 4 நிமிடங்கள் நன்கு கலக்க வேண்டும். பிறகு வேறு ஒரு பாக்கெட்டில் நிரப்பி அமில நேர்த்தி செய்யலாம். பஞ்சு நீக்கிய ஒரு கிலோ விதைக்கு 6 முதல் 10 கிராம் டிரைக்கொடெர்மா விரிடி என்ற நன்மை செய்யும் பூஞ்சணத்தை கலந்து விதைக்க வேண்டும். ஒரு சதம் புங்க இலைச்சாறில் அதே அளவுடன்  உள்ள விதையை ஊற வைத்து உலர வைப்பதன் மூலம் முளைப்பு மற்றும் செடியின் வீரியத்தை அதிகப்படுத்தலாம்.

Tags :
× RELATED கடத்தூர் பகுதியில் சோளம் விளைச்சல் பாதிப்பு