×

நடுவழியில் பயணிகள் தவிப்பு பயணிகளை அச்சுறுத்தும் குடிமகன்கள் டூவீலர் ஸ்டான்டான மார்க்கெட் வெங்காய விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறி விட்டது

தொண்டி, டிச.9: வெங்காயத்தின் விலையை மத்திய அரசு கட்டுப்படுத்த தவறி விட்டது என்று மாநில தமுமுக பொதுச்செயலாளர் குற்றம்சாட்டினார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில பொதுச்செயலாளர் காஜா கனி நேற்று தொண்டியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில், ‘வெங்காயத்தின் விலையை மத்திய அரசு கட்டுப்படுத்த தவறி விட்டது. நிதி அமைச்சர்ெமுறையற்ற பதிலை தருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தெலுங்கானாவில் நடைபெற்ற என்கவுண்டர் முறை சரியானது அல்ல. குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் முலமே தீர்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நீதிமன்றம் கால தாமதம் செய்வதால் துப்பாக்கி சூட்டை மக்கள் ஆதரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

பெண்களை மதிக்கும் பாரம்பரியம் உள்ள நாட்டில் பெண்களின் பாதுகாப்பு தற்போது கேள்விக்குறியாகி கொண்டு வருகிறது. பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும். பொள்ளாச்சி சம்பவத்திற்கும், உத்திரபிரதேசம் உன்னாவில் நடைபெற்ற பாலியல் குற்றத்திற்கும் உடனடியாக தீர்வு காண அரசு முயல வேண்டும் என்றார். அப்போது மாநில செயலாளர் சாதிக் பாட்சா, ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் பட்டானி மீரான் உட்பட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.


Tags : Citizens ,commuters ,government ,stand ,Duveler ,
× RELATED துபாய் மழை, வெள்ளம்: பாதிக்கப்பட்ட...