×

புத்தகம் வெளியீட்டு விழா

மதுரை, டிச. 9: காவல்துறை அலுவலர் ஓய்வு நலச்சங்கம் சார்பில் புத்தகம் வெளியீட்டு விழா, மதுரை ஆயுதப்படை மைதானத்தில் உள்ள மாரியம்மன் மண்டபத்தில் நடந்தது. விழாவிற்கு சங்கத்தலைவர் கார்மேகம் தலைமை வகித்தார். புத்தக ஆசிரியர் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி காசிம் வாழ்த்துரை வழங்கினார். ‘மகாபாரதத்தில் தர்மம்’ எதிரும் புதிரும் என்ற புத்தகத்தை எல்கட் சேர்மன் விஜயகுமார் வெளியிட, மாவட்ட கலெக்டர் வினய் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம், மாநகராட்சி கமிஷனர் விசாகன் மற்றும் ஓய்வுபெற்ற எஸ்ஐ பழனிச்சாமி, நம்பிராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  

Tags : Book launch ,
× RELATED நூல் வெளியீட்டு விழா