தேசிய கராத்தே போட்டி

மதுரை, டிச.9: தேசிய அளவிலான நெடுமங்காடு ஓப்பன் கராத்தே போட்டி சமீபத்தில் கேரளாவில் நடந்தது. இதில் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். மதுரையில் ஆலன்திலக் மற்றும் வட்டாஷிகோஜூரியூ கராத்தே பள்ளி மாணவர்கள் பலரும் கலந்து கொண்டு பதக்கங்களை வென்றனர். அவர்களுக்கு பாராட்டு விழா மதுரையில் நடந்தது. இந்திய தொழில்நுட்ப இயக்குனர் மூவேந்தன் தலைமை வகித்தார். அகில இந்திய தலைமை பயிற்சியாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு செயலாளர் கண்ணன், துணைச்செயலாளர் கனிராஜா, ரமேஷ், விஜயக்குமார் ஆகியோர் பாராட்டி பேசினர்.

Related Stories: