வாடிப்பட்டி, சமயநல்லூர், அலங்காநல்லூர் பகுதிகளில் பராமரிப்பு பணிக்காக நாளை மின்தடை

வாடிப்பட்டி, டிச. 9: சமயநல்லூர் மின்கோட்டத்திற்கு உட்பட்ட வாடிப்பட்டி, மாணிக்கம்பட்டி, அலங்காநல்லூர், கொண்டயம்பட்டி, அய்யங்கோட்டை உள்ளிட்ட துணை மின் நிலையங்களில் நாளை செவ்வாய்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் காலை 9மணி முதல் மாலை 2மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்பட உள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளதுசமயநல்லூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட சமயநல்லூர், தேனூர், தோடனேரி, சத்தியமூர்த்திநகர், அதலை, பரவை, விஸ்தாராஅப்பார்ட்மெண்ட், பரவை மெயின்ரோடு, மங்கையர்கரசி கல்லூரி பகுதிகள், பொதும்பு, பரவை மார்க்கெட், கோவில்பாப்பாகுடி உள்ளிட்ட பகுதிகளிலும், வாடிப்பட்டி துணை மின்நிலையத்திற்கு உள்பட்ட வாடிப்பட்டி, அங்கப்பன்கோட்டம், சொக்கலிங்கபுரம், கச்சைகட்டி, குலசேகரன் கோட்டை, குட்லாடம்பட்டி, குட்டிகரடு, மேட்டு நீரேத்தான், பொருமாள்பட்டி, பூச்சம்பட்டி, ராமயன்பட்டி, சாணாம்பட்டி, செம்மினிப்பட்டி, சமத்துவபுரம், விராலிப்பட்டி, சி.புதூர், ஆண்டிபட்டி, வடுகபட்டி, தனிச்சியம், மேலசின்னம்பட்டி, ஆலங்கொட்டாரம், திருமால்நத்தம், ராயபுரம், ரிசபம், நெடுங்குளம் எல்லையூர், டி.மேட்டுப்பட்டி, கரடிக்கல், கெங்கமுத்தூர், நாராயணபுரம், இராமகவுண்டன்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் மாணிக்கம்பட்டி மற்றும் அலங்காநல்லூர் துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட இராஜாக்காள்பட்டி, மறவபட்டி, சத்திரவெள்ளாளபட்டி, வலையபட்டி, எர்ரம்பட்டி, கோணப்பட்டி, பாலமேடு, சின்னபாலமேடு, மாணிக்கம்பட்டி, சேந்தமங்கலம், பொந்துகம்பட்டி, 66பி மேட்டுப்பட்டி, உசிலம்பட்டி, அலங்காநல்லார், கோட்டைமேடு, கல்லணை, என்.எஸ்.எம்.சுகர்மில்ரோடு, 15பி மேட்டுப்பட்டி, குறவன்குளம், சிறுவாலை, அம்பலத்தடி, அழகாபுரி, புதுப்பட்டி, கோவில்பட்டி, வைகாசிபட்டி, அய்யூர், முடுவார்பட்டி, ஆதனூர், அச்சம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று சமயநல்லூர் மின்னியல் செயற்பொறியாளர் மு.மனோகரன் தெரிவித்துள்ளார்.பனையூர் பகுதியில் இன்று மின்தடைபனையூர் துணை மின் நிலைய மாதாந்திர பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ள பகுதிகள் வருமாறு: பனையூர், சொக்கநாதபுரம், அய்யனார்புரம், சாமநத்தம், பெரியார்நகர், கல்லம்பல், சிலைமான, கீழடி மற்றும் அதற்குட்பட்ட பகுதிகள். மேற்கண்ட தகவலை மதுரை கிழக்கு மின் செயற் பொறியாளர் கண்ணன் அறிவித்துள்ளார்.

Tags : Samananallur ,
× RELATED நாளை மின்தடை