உள்ளாட்சி தேர்தல் குறித்து ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கு பயிற்சி

திருமங்கலம், டிச.9: ஊரக உள்ளாட்சிகளில் இன்று துவங்கும் வேட்பு மனு தாக்கல் குறித்து திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள், அலுவலர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இந்த மாதம் 27 மற்றும் 30ம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி இன்று முதல் வேட்புமனுதாக்கல் துவங்குகிறது. சிற்றூராட்சி எனப்படும் கிராம பஞ்சாயத்துகளில் வார்டு உறுப்பினர்களுக்கான மனுதாக்கல் அந்தந்த ஊராட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது. ஒன்றிய அலுவலகங்களில் ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர், சிற்றுராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் மனுதாக்கல் செய்யவேண்டும்.

இன்று துவங்கி வரும் 13ம் தேதி வரையில் காலை 10 மணி முதல் மாலை 5 வரையில் மனுதாக்கல் நடைபெற உள்ளது. இது தொடர்பாக ஊரக வளர்ச்சி அலுவலர்கள், ஊழியர்கள், ஊராட்சி செயலாளர்களுக்கான சிறப்பு தேர்தல் பயிற்சி வகுப்பு திருமங்கலம் ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. ஆர்டிஓ முருகேசன், பிடிஓக்கள் உதயகுமார், சங்கர்கைலாசம் கூட்டத்தில் கலந்து கொண்டு தேர்தல் நடத்தைகள் குறித்து பேசினர். இந்த கூட்டத்தில் திருமங்கலத்திலுள்ள 38 ஊராட்சி செயலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.Tags : Elections ,Rural Development Officers ,
× RELATED உள்ளாட்சி தேர்தலில் வன்முறையில்...