×

நத்தம் பகுதியில் கால்நடை தீவன தட்டுப்பாடு குறைந்தது

நத்தம், டிச. 9: நத்தம் பகுதியில் முழுக்க முழுக்க கிராம பகுதிகளே உள்ளன. இங்கு ஆயிரத்திற்கும் அதிகமான கறவை பசு மாடுகள் அந்தந்த கிராமங்களில் கால்நடை வளர்ப்போர் பராமரித்து வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு கடும் வறட்சி இருந்து வந்தது. அப்போது கால்நடைகளுக்கு தேவையான தீவனம் இல்லாமல் சிரமப்பட்டு வந்தனர். ஆனால் கடந்த மாதம் முதல் வடகிழக்கு பருவமழையினாலும், வெப்ப சலத்தின் காரணமாகவும் அவ்வப்போது வானில் கருமேகம் ஒன்று கூடி மழை பெய்து வருகிறது.

இதனால் கறவை பசு மாடுகளுக்கும், ஆடு மற்றும் கால்நடை இனங்களுக்கும் தேவையான பசும்புல் தோட்டங்களிலும், கால்வாய்களிலும், கண்மாய்களிலும், தோப்புகளிலும் செழித்து காணப்படுகிறது.இதை அவர்கள் அறுவடை செய்து இருப்பு வைத்தும் மேலும் தானாக மேய்ச்சலுக்கும் அந்த புற்களை பயன்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: கால்நடைகளுக்கு தேவையான பசும்புல் தட்டுப்பாடு தற்போது பெய்து வரும் மழையினால் குறைந்தது. இதனால் கால்நடைகள் செழிப்புடன் காணப்படுகிறது. அத்துடன் கறவை பசு மாட்டின் மூலம் பால் உற்பத்தியும் அதிகரித்

துள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags : area ,Natham ,
× RELATED நத்தம் கோவில்பட்டியில் பகவதி அம்மன் கோயில் திருவிழா