×

பழநியில் பிரேக் பிடிக்காத அரசு பஸ் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்

பழநி, டிச. 9: பழநியில் அரசு டவுன் பஸ் பிரேக் பிடிக்காமல் சென்ற நிலையில் பயணிகள் மயிரிழையில் உயிர் தப்பினர்.பழநி பஸ் நிலையத்தில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள ஆண்டிபட்டி கிராமத்திற்கு நேற்று 9ம் நம்பர் அரசு டவுன் சென்று கொண்டிருந்தது. பஸ்சில் சுமார் 30க்கும் அதிகமான பயணிகள் இருந்தனர். சாமி தியேட்டர் வளைவில் திரும்பும்போது பஸ்சில் பிரேக் பிடிக்கவில்லை என தெரிகிறது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டனர். பஸ்சில் பயணம் செய்த சில இளைஞர்கள் சுதாகரித்துக் கொண்டு கீழே இறங்கி அங்குமிங்கும் கற்களை எடுத்து பஸ்சின் சக்கரத்திற்கு அடியில் வைத்தனர். இதனால் சிறிது தூரத்தில் பஸ் நின்றது. நகர் பகுதிக்குள் பஸ் சென்று கொண்டிருந்ததால் மெதுவாக செல்ல வேண்டிய நிலைமை இருந்தது. இதனால் பஸ்சை நிறுத்த முடிந்தது. புறநகர் பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்தபோது பஸ்சின் பிரேக் பழுதாகி இருந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும். போக்குவரத்துக் கழக அதிகாரிகள் பயணிகள் உயிருடன் விளையாடாமல் பஸ்களை உரிய பழுதுநீக்கி பயன்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதன்பின் வேறு பஸ்களில் ஏறி பயணிகள் தங்கள் ஊர்களுக்குச் சென்றனர்.

Tags : Passengers ,state bus collision ,Palani ,
× RELATED அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து; ஒருவர் பலி: 25க்கும் மேற்பட்டோர் காயம்!!