காட்டுபன்றிகள் அட்டகாசத்தை கண்டித்து 17ம் தேதி வன அலுவலகம் முற்றுகை

உடுமலை,   டிச. 9:  வன அலுவலக முற்றுகை போராட்டத்தை பெரிய அளவில் நடத்த கிராமம்   தோறும் விவசாயிகள் விழிப்புணர்வு கூட்டம் நடத்திவருகின்றனர்.உடுமலை   அருகே உள்ள சர்க்கார்புதூர் கிராமத்தில் காட்டுப்பன்றிகள் அட்டகாசம்   அதிகரித்துவருகிறது. கடந்த வாரம் தோட்டங்களில் புகுந்த காட்டுப்பன்றிகள் பல   நூறு ஏக்கரில் மக்காச்சோள பயிர்களை துவம்சம் செய்தன.இதுபற்றி   தகவல் அறிந்ததும், வனத்துறையினர் வந்து பார்த்துவிட்டு சென்றுவிட்டனர்.   விவசாயிகள் தடியுடன் இரவு பகலாக ரோந்து சென்று பன்றிகளை விரட்டும்   முயற்சியில் ஈடுபட்டனர்.காட்டுப்பன்றிகளை நிரந்தரமாக விரட்ட   நடவடிக்கை எடுக்காத வனத்துறையை கண்டித்து, உடுமலை குட்டைத்திடலில் உள்ள   வனத்துறை அலுவலகத்தை வரும் 17ம்தேதி குடும்பத்துடன் முற்றுகையிட   விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். தீர்வு கிடைக்கும் வரை அலுவலகம் முன்பு   காத்திருப்பு போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.இதற்காக,   விவசாயிகள் கிராமம்தோறும் ஆயத்த கூட்டம் நடத்தி வருகின்றனர்.   காட்டுப்பன்றிகளால் பாதிக்கப்பட்ட ராவணாபுரம், வல்லக்குண்டாபுரம்,   ஜிலேப்பநாயக்கனூர், தீபாலபட்டி, தளி, ஜல்லிபட்டி, சர்க்கார்புதூர் உள்ளிட்ட   கிராமங்களில் விவசாயிகள் கூட்டம் நடத்தி மக்களை திரட்டி வருகின்றனர்.வரும் 17ம்தேதி ஆயிரக்கணக்கானோரை திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்த விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர்.

Related Stories: