×

உரம் கலந்த மண் நிரப்பும் பணி இன்று துவக்கம்

ஊட்டி, டிச. 9: மலர் கண்காட்சிக்காக பூங்காவை தயார் செய்யும் பணிகள் நடந்து வரும் நிலையில், பூங்காவில் உள்ள 35 ஆயிரம் தொட்டிகளில் மண் நிரப்பும் பணிகள் இன்று  துவங்குகிறது. ஆண்டு தோறும் மே மாதம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இதைகாண வெளி நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க ஆண்டு தோறும் 35 ஆயிரம் தொட்டிகளில் பல்வேறு வகயைான மலர் செடிகளை வைக்கப்பட்டு, அவைகள் அனைத்தும் மாடங்களில் அலங்கரித்து வைக்கப்படுவது வழக்கம்.  மலர் கண்காட்சிக்கு 5 மாதங்களே உள்ள நிலையில், நாற்று நடவு பணிகள் மேற்கொள்ளும் பணிகள் விரைவில் துவக்கப்படவுள்ளது. இதற்காக இயற்கை உரம் பூங்காவில் உள்ள பாத்திகளில் கொட்டப்பட்டுள்ளது. மேலும், மலர் கண்காட்சியின் போது மாடங்கள் மற்றும் புல் மைதானங்களில் வைக்கப்படவுள்ள 35 ஆயிரம் தொட்டிகளில் நாற்று நடவு பணிகளை மேற்கொள்வதற்காக, தொட்டிகளில் இயற்கை கலந்த மண் நிரப்பும் பணிகள் நாளை துவக்கப்படவுள்ளது. இதற்காக, பூங்காவில் உள்ள மாடத்தில் உரம் கலந்த மண் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.இன்று முதல் தொட்டிகளில் மண் நிரப்பப்பட்டு நாற்று நடவு பணிகளுக்காக தயார் செய்யப்படும். இம்மாதம் இறுதி வாரம் முதல் பூங்கா மற்றும் தொட்டிகளில் மலர்கள் பூக்கும் காலத்தை பொறுத்து நாற்று நடவு பணிகள் துவக்கப்படும் என பூங்கா அதிகரிகள் தெரிவித்தனர்.



Tags :
× RELATED நீலகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடி...