×

பேரட்டி சாலை சீரமைக்காவிட்டால் போராட்டம்

குன்னூர்,டிச.9:  குன்னூர் பேரட்டி பஞ்சாயத்திற்குட்பட்ட 5க்கும் மேற்பட்ட கிராமங்கள்  உள்ளன. குறிப்பாக கம்பி சோலை, சென்ட்டோரியம், சின்ன வண்டி சோலை, பாரத நகர்  மற்றும் பேரட்டி போன்ற பகுதிகளை இணைக்கும் சாலையாக சென்ட்டோரியம் சாலை  உள்ளது. இந்த சாலை கடந்த 4 ஆண்டுக்கும் மேல் சீரமைக்காததால் உள்ளதால்,  ஏற்கனவே இருந்த தார் சாலை சில நாட்களுக்கு முன் பெய்த தொடர் மழையால்  முழுவதுமாக அடித்து செல்லப்பட்டது. இதனால், தனியார் வாகனங்கள் கிராம  பகுதிகளுக்குள் வருவதில்லை, சில வாகனங்கள் அவசரதேவைக்கு வந்தால் அவையும்  சாலையில் பழுதாகி நின்று விடுகிறது. இதனால் நோயாளிகள், ெபாதுமக்கள், பள்ளி  குழந்தைகளும் என அனைத்துதரப்பட்ட மக்களும் கடும் சிரமத்திற்குள்ளாகி  வருகின்றனர்.

அண்மையில் சாலை சீரமைப்பு தொடர்பாக அப்பகுதி மக்கள்  இரண்டு முறை மாவட்ட நிர்வாகத்திடம் புகார் மனு அளித்துள்ளனர். இதுவரை சாலை  சீரமைக்க அதிகாரிகள் எவ்வித நடவடிக்கை எடுக்க வில்லை என்று கூறப்படுகிறது.  இதனால் அதிருப்தியடைந்த அப்பகுதி பொதுமக்கள் போராட்டம் நடத்த முடிவு  செய்துள்ளனர்.

Tags : road ,
× RELATED திருவில்லிபுத்தூரில் 2 இடங்களில் சாலையை சீரமைக்கக்கோரி நூதன போராட்டம்