இடைப்பாடி அருகே காவிரியில் மணல் அள்ளிய 2 டிராக்டர் பறிமுதல்

இடைப்பாடி, டிச.9: இடைப்பாடி அருகே புள்ளாக்கவுண்டம்பட்டியில் காவிரி ஆற்றில் மணல் அள்ளிய 2 டிராக்டரை பறிமுதல் செய்த தாசில்தார், சேவூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இடைப்பாடி அருகே உள்ள புள்ளாக்கவுண்டம்பட்டி, காவேரி கரையோர பகுதியில் பரிசலில் சென்று தண்ணீர் மூழ்கி மணல் அள்ளி பரிசலில் போட்டு எடுத்து வந்து கரையில் கொட்டி டிராக்டரில் கொண்டு சென்று விற்பனை செய்யப்படுவதாக, சங்ககிரி தாசில்தார் பாலாஜிக்கு ரகசிய தகவல்வந்தது. இதையடுத்து தாசில்தார் பாலாஜி மற்றும் வருவாய்த்துறையினர் சம்பந்தப்பட்ட பகுதிக்கு நேற்று முன்தினம் திடீர் ஆய்வுக்கு சென்றனர். அப்போது இரண்டு மணல் அள்ளிக்கொண்டு இருந்தனர். இதையடுத்து டிராக்டரை மணலுடன் பறிமுதல் செய்த தாசில்தார், சேவூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : caviar ,
× RELATED இளையராஜாவை தேடி வருகின்றனர். வாலிபர்...