×

தனித்திறன் போட்டியில் மோகனூர் மாதிரி பள்ளி மாணவிகள் சாதனை

பரமத்திவேலூர், டிச.9: நாமக்கல் மாவட்ட அளவில் நடைைபெற்ற தனித்திறன் போட்டியில்மோகனூர் அரசு மகளிர் மாதிரி பள்ளி மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.சர்வதேச பெண் குழந்தைகள் தினவிழாவை முன்னிட்டு, கல்வி மாவட்டம் மற்றும் வருவாய் மாவட்ட அளவில், பள்ளி மாணவ- மாணவியருக்கான கவிதை, பேச்சு, ஓவியம் மற்றும் முழக்கமிடுதல் போட்டிகள் நாமக்கல்லில் நடைபெற்றது. இதில், பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட மாணவ- மாணவியர் கலந்து கொண்டனர். இவர்களில், மோகனூர் அரசு மகளிர் மாதிரி பள்ளி, அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று சாதனை படைத்தது.இப்பள்ளி மாணவி சுபிக்சா, முழக்கம் எழுதுதல் போட்டியில் முதலிடமும், ஓவியப்போட்டியில் மாளவிகா முதலிடமும், கவிதைப்போட்டியில் பிரியதர்ஷினி இரண்டாமிடமும், பேச்சுப்போட்டியில் ஸ்ரீகவி மூன்றாமிடம் பிடித்து சாதனை படைத்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு, முதல் பரிசாக தலா ₹4,000, இண்டாமிடம் பரிசாக ₹3,000, 3ம் பரிசாக ₹2,500 மற்றம் சான்றிதழ் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவியரை, பள்ளித் தலைமையாசிரியர் சுடரொளி, உதவித் தலைமை ஆசிரியர் கோபாலகிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Tags :
× RELATED கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்