மாவட்டத்தில் 10 ஊராட்சி ஒன்றியங்களில் 188 வார்டு உறுப்பினர் பதவிக்கு இடஒதுக்கீடு அறிவிப்பு

தர்மபுரி, டிச.9: தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில், 188 வார்டு உறுப்பினர் பதவிக்கான இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, நல்லம்பள்ளி, பென்னாகரம், காரிமங்கலம், பாலக்கோடு, மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், கடத்தூர், ஏரியூர் ஆகிய 10 ஒன்றியங்கள் உள்ளன. இந்த 10 ஒன்றியங்களில் உள்ள 188 வார்டுகளுக்கான தேர்தல், வரும் 27ம் தேதி மற்றும் 30ம் தேதிகளில் நடக்கவுள்ளது. இந்நிலையில் 10 ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கான இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரூர் ஊராட்சி ஒன்றியத்தில், 23 ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கான இடங்கள் உள்ளன. அரூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் பதவியானது மகளிருக்கு (பொது) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கான இட ஒதுக்கீடு விவரம்: எஸ்.டி (மகளிர்): கோட்டப்பட்டி மற்றும் நரிப்பள்ளி ஊராட்சி (வார்டு எண் 23). எஸ்.டி (பொது): சிட்லிங் ஊராட்சி (வார்டு எண் 22). எஸ்.சி (மகளிர்): எம்.வேளாம்பட்டி, மருதிப்பட்டி (வார்டு எண் 1), கீழ்மொரப்பூர் மற்றும் கே.வேட்ரப்பட்டி (வார்டு எண் 2), வேடகட்டமடுவு கிராம ஊராட்சி (வார்டு எண் 5), பேதாதம்பட்டி மற்றும் கொக்கராப்பட்டி (வார்டு எண் 20).

எஸ்.சி (பொது): கொங்கவேம்பு மற்றும் மாம்பட்டி (வார்டு எண் 3), மோப்பிரிப்பட்டி (வார்டு எண் 9), செல்லம்பட்டி மற்றும் எல்லப்புடையாம்பட்டி (வார்டு எண் 10). மகளிர் (பொது): தீர்த்தமலை மற்றும் வேடகட்டமடுவு (வார்டு எண் 6), எச்.அக்ராஹரம் மற்றும் செட்ரப்பட்டி (வார்டு எண் 8), வீரப்பநாய்க்கன்பட்டி மற்றும் வேப்பம்பட்டி (வார்டு எண் 11), பையர்நாய்க்கன்பட்டி மற்றும் நரிப்பள்ளி (வார்டு எண் 13), தொட்டம்பட்டி மற்றும் கொளகம்பட்டி (வார்டு எண் 16), ஜம்மனஹள்ளி, கோபாலபுரம், பறையப்பட்டி புதூர் (வார்டு எண் 18), அச்சல்வாடி மற்றும் கீரைப்பட்டி (வார்டு எண் 21). பொதுப்பிரிவு: மத்தியம்பட்டி மற்றும் மாம்பட்டி (வார்டு எண் 4), வடுகப்பட்டி, கே.வேட்ரப்பட்டி, கொங்கவேம்பு (வார்டு எண் 7), பெரியப்பட்டி, நரிப்பள்ளி (வார்டு எண் 12), வேப்பம்பட்டி மற்றும் பொன்னேரி (வார்டு எண் 14), கீரைப்பட்டி மற்றும் எல்லப்புடையாம்பட்டி (வார்டு எண் 15), சின்னாங்குப்பம், கோபிநாதம்பட்டி மற்றும் பறையப்பட்டி புதூர் (வார்டு எண் 17), கொக்கராப்பட்டி மற்றும் பறையப்பட்டி புதூர் கிராம ஊராட்சி (வார்டு எண் 19). இதுபோன்று பிற ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கான இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Tags : ward members ,district ,panchayat unions ,
× RELATED தலைவர், வார்டு உறுப்பினர்கள் பதவியேற்பு