வழித்தடங்களை மாறி சென்றதால் விகேபுரத்தில் மினிபஸ்களுக்கு அபராதம்

வி.கே.புரம்,டிச. 9:  வி.கே.புரத்திலிருந்து அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி பகுதிகளுக்கு 10க்கும்  மேற்பட்ட தனியார் மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.  இந்த பேருந்துகள் தங்களுக்கு வழங்கப்பட்ட வழி தடங்களில் பேருந்துகள் இயக்காமல் மாற்று பாதையில் தங்கள் இஷ்டத்திற்கு சென்று வருதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வந்தனர். இந்நிலையில் நேற்று வி.கே.புரம் எஸ்ஐ மணிகண்டன் தலைமையில் போலீஸ்சார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வி.கே.புரத்தில் தங்களுக்கு வழங்கப்பட்ட வழி தடங்களில் பேருந்துகள் இயக்காமல் மாற்று பாதையில்  சென்றுவந்த 5 தனியார் மினிபேருந்துகளுக்கு தலா ரூ. 500 வீதம் 2ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது.

Related Stories:

>