×

நல்ல தண்ணீரின்றி கிராம மக்கள் வேதனை தனியார் பட்டா நிலம் வழியாக இறந்த மூதாட்டி உடலை எடுத்து செல்ல எதிர்ப்பு வையம்பட்டி அருகே பரபரப்பு

மணப்பாறை, டிச.9: வையம்பட்டி அருகே இறந்த மூதாட்டி உடலை தனியார் பட்டா நிலம் வழியாக கொண்டு சென்று அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக நடந்த போராட்டம் காலை முதல் மாலை வரை நீடித்தது.
மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே ராமலிங்கப்பட்டியை சேர்ந்தவர் பேச்சியம்மாள் (70), உடல் நலக்குறைவால் இறந்தார். இவரது இறுதி ஊர்வலம் ஊர்வலம் தனியார் பட்டா நிலத்தின் வழியாக செல்ல அதன் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், இருதரப்பினருக்கிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதனை தவிர்க்க காலை 8 மணிக்கே வையம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். காலம், காலமாக அந்த பட்டா நிலத்தின் வழியாகத்தான் இறந்தவர்களின் இறுதி ஊர்வலம் சென்றதாக பேச்சியம்மாளின் உறவினர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். இந்நிலையில் மதிய நேரத்தில் சம்பவ இடத்திற்கு வந்த மணப்பாறை தாசில்தார் தமிழ்க்கனி மற்றும் வையம்பட்டி போலீசார் பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை.இதற்கிடையே மற்றொரு பட்டா நிலத்து உரிமையாளர்கள் தன் நிலத்தின் வழியே இறுதி ஊர்வலம் செல்லக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து பாதையை முள்வேலி போட்டு அடைத்ததால் பதற்றம் ஏற்பட்டது. பின்னர், மாலையில் அதிகாரிகளின் வேண்டுகோளை ஏற்று சின்ன பச்சை என்பவர் நிலத்தின் வழியே பேச்சியம்மாளின் இறுதி ஊர்வலம் நடந்தது. இதனால், நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரை ராமலிங்கப்பட்டியல் பதற்றமும், பரபரப்பும் நிலவியது.

Tags : paddy land ,brother ,
× RELATED கிரிவலம் சென்று வந்தபோது சோகம்;...